தமிழக ஆந்திர எல்லை.. மலைப்பகுதியில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயம் - மதுவிலக்கு போலீசார் அதிரடி! பரபரப்பு Video!
Liquor Seized : தமிழக - ஆந்திர எல்லை மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட 600 லிட்டர் சாராய கேனை அழித்த மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் அதிரடி.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயாம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான தேவராஜபுரம் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் நந்தினி தேவி தலைமையிலான காவல்துறையினர் தேவராஜபுரம் மலைபகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர், அப்பொழுது சட்ட விரோதமாக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை கேனுடன் கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் கடந்த சில தினங்களாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.