பழனி குதிரையாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே குதிரையாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Share this Video

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. இதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமான யானை ,சிறுத்தை,மான் ,காட்டு பன்றிகள் ,காட்டுஎறுமைகள் உள்ளிட்டவை விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போது குதிரையாறு அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று உலாவும் காட்சிகளும், நாய் ஒன்றை பிடிக்க துரத்துவதும், பொதுமக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து சிறுத்து தப்பி சென்றது. 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணைக்கு சுற்றுலாவுக்கு வருகை தரும் சுற்றுபயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை வனத்துறையினர் ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Video