திம்பம் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடி விளையாடும் சிறுத்தை

திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக  வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.

Share this Video

திம்பம் மலைப்பாதையில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குள் இரை தேடி நடமாடுவது வழக்கம். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் வனச்சாலைகள் வாகனங்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் நேற்றிரவு திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் பார்த்தபோது அந்த சிறுத்தை ரோட்டை சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் வாகன வெளிச்சம் காரணமாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

Related Video