கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு அளித்த இருவருக்கு அபராதம் !

Share this Video

கொடைக்கானலில் காட்டெருமை அடிக்கடி நகர் பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையான நிகழ்வு. இதே போல் நேற்று கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதி உணவகபகுதிக்கு சென்ற காட்டெருமைக்கு அங்கிருந்த பணியாளர்கள் இருவர் கத்தரிக்காயை உணவாக வழங்கி உள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் இருவருக்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.நகர் பகுதிக்குள் எதிர்பாராத விதமாக உலா வரும் வன விலங்குகளுக்கு உணவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

Related Video