Watch : பாலாறு பகுதியில் அத்துமீறிய கர்நாடக வனத்துறை.. தமிழக - கர்நாடக எல்லையில் பரபரப்பு
தமிழக கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை அத்துமீறல் குறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தமிழக கர்நாடக எல்லையான பாலாறு , காரைகாடு, கோவிந்தபாடி, செட்டிபட்டி, உள்ளிட்ட பகுதி மீனவர் மற்றும் பொதுமக்கள் மீது கர்நாடக வனத்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் கடந்த 2014 ஆம் ஆண்டு செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனி, கடந்த மாதம் காரைகாடு ராஜா ஆகியோர் உயிரிழந்த நிலையில் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி கொல்லப்பட்டதால் உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கு கர்நாடகா அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கர்நாடக முதல்வர் சிவராஜ் பொம்மையை சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நேரில் சந்தித்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற தமிழக கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தையில் தமிழக எல்லையான பாலாறு, செட்டிப்பட்டி, கோவிந்தபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் கர்நாடகா வழக்கத்துறை தொடர்ந்து அத்து மீறி தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும், மீனவர்களின் வலையை அறுத்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் இரு மாநிலத்திற்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அவ்வப்பொழுது நிலவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியர் ரமேஷிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்தார். கர்நாடக அரசு தமிழகத்திற்குள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட செங்கப்பாடி கோபி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரமேஷ் உங்களது அனைத்து கோரிக்கையிலும் நிறைவேற்றப்படும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் கர்நாடக மாநிலத்திற்குள் வரும் தமிழர்கள் அன்போடு நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார் அதன் பிறகு கர்நாடகா வனத்துறை தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை எடுத்துப் பேசிய கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அலுவலர் சந்தோஷ் குமார் தொடர்ந்து தமிழக மீனவர்களை குற்றவாளியாக சித்தரித்து பேசியதால் இந்த பேச்சுவார்த்தையில் திருப்திகரமாக இல்லை.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக முதலமைச்சரை எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சந்தித்து கர்நாடக முதல் பசவராஜ் பொம்மை இடம் கர்நாடகா வனத்துறை சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு பெறவும் இரு மாநில எல்லையில் அமைதி நிலவவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தெரிவித்தார்.
இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்
இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்