சென்னையில் கார்ல் மார்க்ஸ் உருவ சிலை! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது.நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.’நியாயத்துக்கு ஒரு மூக்கையா’ என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையாதேவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.