சூறைக்காற்றில் சிக்கி கடலில் மூழ்கிய விசைப்படகு.. உயிருக்கு போராடிய மீனவர்கள்- வெளியான வீடியோவால் பரபரப்பு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், சூறைக்காற்று வீசி வருவதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவரின் விசைபடகு சூறைக்காற்றில் சிக்கி கடலில் மூழ்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published Dec 31, 2023, 10:49 AM IST | Last Updated Dec 31, 2023, 10:49 AM IST

சூறாவளி காற்றில் சிக்கிய படகு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில் குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மீனவருக்கு சொந்தமாக இரண்டு விசைபடகுகள் உள்ளன.  இந்த இரண்டு விசை படகுகளும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் சுமார் 20 மீனவர்களுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக மீன்களை பிடித்த நிலையில், நேற்றும் மீன்களை பிடித்துக்கொண்டிருந்தனர். 

உயிர் தப்பிய மீனவர்கள்

அப்போது திடீரென சூறைக்காற்று வீசியதில் ஒருபடகிற்குள் கடல்நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பாரம் தாங்காமல் படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது. இதனையடுத்து படகை மீட்க மீனவர்களை எவ்வளோ முயன்றுள்ளனர். ஆனால் அதிகளவு மீன் மற்றும் தண்ணீர் பாரம் தாங்காமல் படகானது கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறி கயிறு மூலம் இழுத்து படகை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவு முயன்றும் படகை மீட்க முடியாமல் போக உயிர்பிழைத்த மீனவர்களை அழைத்து கொண்டு மற்றொரு படகில் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். மூழ்கிய படகோடு சேர்த்து பல இலட்சம் மதிப்பிலான பொருட்களும் கடலுக்குள் மூழ்கி போயுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Video Top Stories