
கமல் சொல்வது தான் சரி! தமிழுக்காக நாங்கள் துணை நிற்போம்! தமிழக மக்கள் கமலுக்கு ஆதரவு
இரண்டு நாட்களுக்கு முன்பு தக் லைஃப் ஆடியோ லாஞ்ச்சில் நடிகர் கமல் ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார முன்னிலையில் பேசும்போது, ''தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம்'' என பேசி இருந்தார். இது தற்போது கர்நாடாகாவில் சர்ச்சையாகி இருக்கிறது. கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கமல் ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதுகுறித்து தமிழக மக்களிடம் ஏசியாநெட் தமிழ் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த பதில் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.