Viral Video : கள்ளக்குறிச்சி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மாடிக்கு சென்றாரா? புதிய வீடியோவால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன்பாக பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அவர் இரவு நேரத்திலேயே 3வது மாடிக்கு செல்வது தெரியவந்துள்ளது.
 

First Published Jul 21, 2022, 8:30 AM IST | Last Updated Jul 21, 2022, 8:30 AM IST

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இறப்பதற்கு முன்பாக மாணவி பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்கிறார். 12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories