
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.. தன்மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள ஞானசேகரன் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், அது கை கொடுக்காத நிலையில், இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்