"அனைத்துமே இயங்குவது ரவுடிகள் மூலம் தான்".. விஜயை மிரட்டிய வீரமணி - பத்திரிக்கையாளர் பாண்டியன் ஓபன் டாக்!

Journalist Pandian : ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை ஒரு பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன். 

Share this Video

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ச்சியாக பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில், அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் மலர்கொடி குறித்து நமது செய்தியாளர், பத்திரிகையாளர் பாண்டியனிடம் கேட்ட பொழுது. "மலர்கொடியின் கணவர் "தோட்டம்" சேகர் அதிமுகவில் பிரபலமான பகுதி செயலாளராக பணியாற்றி வந்தார். தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் மலர்கொடி. அவருடைய கொலையில் கைதான மயிலை சிவாவின் கொலை வழக்கில் தான், தற்பொழுது மலர் கொடியின் மகன் சிறையில் இருக்கின்றார்" என்று அவர் கூறினார். 

"பெரிய அரசியல் தலைவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது இந்த ரவுடிகள் தான், அவர்கள் தான் பகுதி செயலாளராக பணியாற்றுவார்கள். இவர்களுக்கு காவல்துறையும் துணைபோகும். இவர்கள் இருவரையும் ஆட்டிவைப்பது அன்றைய தேதியில் தமிழகத்தை ஆள்பவர்கள் தான்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார். 

மேலும் ஒரு தயாரிப்பாளருடன் சிறு பிரச்சனை ஏற்பட்டபோது, விஜயை மிரட்டி அந்த தயாரிப்பாளரோடு சமரசம் செய்யவைத்தவர் அயோத்திகுப்பம் வீரமணி என்றும் கூறியுள்ளார் பாண்டியன்.

Related Video