
மூச்சு இருக்கும் வரை அதிமுக வில் இருப்பேன் செங்கோட்டையன் எங்கு இருந்தாலும் வாழ்க.. - ஜெயக்குமார்
அண்ணன் செங்கோட்டையன் ஒரு முடிவெடுத்து தவெகவுக்கு சென்றுள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. நேற்று, இன்று, நாளை என எப்போதும் நான் அதிமுகவில் தான் இருப்பேன். இறுதிமூச்சு வரை அதிமுகவில் தான் தொடர்வேன். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டேன். ஆனால் என்னை பொறுத்தவரை அதிமுக என்னும் புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது. நான் எலி என யாரை சொல்கிறேன் என உங்களுக்கே தெரியும்.