Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!

Palani Murugan Temple : பழனி முருகன் கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, பக்தர் ஒருவர் பேருந்து ஒன்றை பரிசாக அளித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

First Published May 10, 2024, 9:35 PM IST | Last Updated May 10, 2024, 9:35 PM IST

பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் கடந்த இரண்டு மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று முருகனை தரிசிக்க மலை மீது செல்கின்றனர். மேலும் குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளி  பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பேட்டரியில் இயங்கும் கார்கள், ஒரு மினி பேருந்து இலவசமாக இயக்கி வருகிறது. 

இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வர பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான பேருந்து ஒன்றை வாங்கி பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். பாத விநாயகர் கோயில் முன்பு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார்.
பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்து இலவசமாக இயக்கப்படவுள்ளது.