ஜாபர் சாதிக் கைது.. அவர் அளித்த சில வாக்குமூலம் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் தகவல்!

Jaffer Sadiq : ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம்.

First Published Mar 9, 2024, 9:12 PM IST | Last Updated Mar 9, 2024, 9:12 PM IST

பல நாட்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று ராஜஸ்தான் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது கடந்த 2019ம் ஆண்டில் இருந்து மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது என்ற தகவல் இப்பொது கிடைத்துள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது என்றும், ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருளை கடத்தியுள்ளார் என்ற திகிடும் தகவலும் வெளியாகியுள்ளது.

உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார் அவர். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம்பெட்டமைன் தயாரிப்பின் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை நிச்சயம் என்றும் ஞானேஷ்வர் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஞானேஷ்வர் திட்டவட்டமாக தெரிவித்தார்.