பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!
பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
தீபாவளி திங்கள் கிழமை கொண்டாடப்படுவதால் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தீபாவளி அன்றே பலர் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், ‘வரும், 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர்.எனவே இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!