தவெக நிர்வாகிகள் உதவுவதை தடுக்கும் அளவிற்கு அது என்ன தேச துரோக குற்றமா ? சீமான் பேட்டி !

Share this Video

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன அரசியல் செய்யப் போகிறார்கள்.தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும் போது அதை தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் தேச துரோகம் ஆகிவிட்டதா? முதலில் இந்த தலைவர்கள் அரசியல் ஆக்கறாங்க அரசியல் பேசுறாங்க என்று பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம். எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார். எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது.கூட்டணி தர்மத்திற்காக இது போன்று பேசுகிறது மனசாட்சியுடன் செல்வ பெருந்தகை பேசுகிறாரா?காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி வைத்திருந்தால் இப்படி பேசுவாரா? என்று சீமான் பேட்டியில் பேசியுள்ளார் !

Related Video