Bharath Vs India | பாரத் பெயர் மாற்றம் தேவையா? - மக்கள் கருத்து!
நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றும் மசோதாவும் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்..
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றும் மசோதாவும் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்..