Watch : கிருஷ்ணகிரி காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு! - தாழ்வான பகுதிகளில் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

First Published Aug 4, 2022, 4:06 PM IST | Last Updated Aug 4, 2022, 4:06 PM IST

பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கேஆர்பி அணையில் இருந்து 3 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Video Top Stories