மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published Sep 10, 2024, 11:49 PM IST | Last Updated Sep 10, 2024, 11:49 PM IST

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video Top Stories