
Incredible India போன்று நான் Incredible இளையராஜா!சிம்பொனி இசை நிகழ்வுக்கு புறப்பட்ட இளையராஜா பேட்டி!
இசைஞானி இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்ட இளையராஜா, சிம்பொனி இசை அரங்கேற்றம் நாட்டினுடைய பெருமை என்றும், இன்கிரிடிபிள் இந்தியா போன்று இன்கிரிடிபிள் இளையராஜா என்றும் கூறியுள்ளார்.