Ilaiyaraja meets PM Modi: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலை வணங்குகிறேன்!இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!

Share this Video

Ilaiyaraja meets PM Modi: அண்மையில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்தார். தனது 81-வது வயதில் இத்தகைய சாதனையை நிகழ்த்திய அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டு மழை பொழிந்தனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்கள் பற்றி இருவரும் பேசினோம். இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. பிரதமர் மோடியின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Video