Asianet News TamilAsianet News Tamil

கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!

Jeyakumar Death : திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் மரணம் குறித்த ஒரு முக்கிய தகவலை ஐஜி கண்ணன் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

First Published May 13, 2024, 8:24 PM IST | Last Updated May 13, 2024, 8:25 PM IST

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல ஐஜி கண்ணன்... ஜெயக்குமார் காணவில்லை என மூன்றாம் தேதி புகார் வந்தது, அன்றைய தினமே இரவு 9 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மனுவுடன் இரண்டு கடிதம்  கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் 15 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் அளவு கொண்ட கடப்பாக்கல் மேலே வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் கம்பியுடன் சுற்றிய நிலையில் காணப்பட்டது. அவரது வாயில் பாத்திரம் தேய்க்கும் Scrubber அவரது வாயில் வைக்கப்பட்டிருந்தது. இப்பொது அறிவியல் ரீதியான விசாரணை நடைபெறுகிறது.

சைபர் காவல்துறை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புகாரின்போது அளிக்கப்பட்ட கடிதத்தில் 32 பேர் குறிப்பிடப்பட்டுள்ளது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக பத்து தனி படைகள் அமைக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்ட உடற்கூறை அறிக்கை மட்டும் இப்பொது வந்துள்ளது, முழுமையாக அறிக்கை இன்னும் வரவில்லை. விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, தற்போது வரை சந்தேக மரணமாக மட்டும் தான் இந்த வழக்கு வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிட்ட 32 பேரிடம் மீண்டும் விசாரிக்க வாய்ப்பு உள்ளது.

உடல்கூறாய்வு முழு அறிக்கை வந்த பிறகு ராமஜெய வழக்குடன் ஒத்துப் போகிறதா என்று முடிவு தெரிய வரும். பல கேள்விகளுக்கு தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது, அறிவியல் ரீதியான அறிக்கை வந்த பிறகு தான் முடிவு சொல்லப்படும். ராமஜெயம் வழக்கு தொடக்கத்திலே கொலை வழக்கு என பதிவு செய்யப்பட்டது ஆனால் இந்த விளக்கு அப்படி இல்லை என்றார் அவர். 

Video Top Stories