Iftar Feast |நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது - அமைச்சர்மகேஷ் பேச்சு!
கமாலியா முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் நாகப்பட்டினம் பழந்தெருவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நாட்டின் கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் இஸ்லாமியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பண்டைய தமிழகத்தில் இஸ்லாமியர்கள் வணிக ரீதியாக முக்கிய இடத்தை பிடித்துள்ளனர் என்றார். அதே போல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் இஸ்லாமியர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. அதனால் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு பல சட்டங்களை இயற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் முன் நின்று குரல் கொடுத்து வருகிறார் என்றார்.