குற்றால அருவியில் நீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரா நிலையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் திரளான பக்தர்கள் குற்றலா அருவிகளில் ஆனந்தமாக நீராடி செல்கின்றனர்.

Share this Video

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலம் பேரறிவுயில் நீராடுவதற்காக திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக குற்றாலம் பேரறிவில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. விடிய விடிய ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றாலம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாததின் காரணமாக அருவி களில் நீர்வரத்து வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.

Related Video