
ஆணவ கொலைகள் சுதந்திரம் வரும் முன்பே இருந்தே நடக்கிறது...சமுதாய அமைப்பு அப்படி ! கமல்ஹாசன் பேட்டி !
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்ட தொடரில் கலந்து கொண்டு விட்டு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வெளியில் இருந்து கூர்மையாக எல்லாரும் பார்த்து கொண்டு இருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு முதல். தமிழ்நாடு. இது தான் என்னுடைய போக்கஸ். இதற்காக தான் போய் இருக்கிறேன். முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என நினைக்கிறேன். அங்கே என்ன பேசுகிறேன் என்பதை இங்கு சொல்ல கூடாது. பேச ஆரம்பித்த பின் கேள்விகள் நிறைய வரும். ஆணவ கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்ற வேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.