Holi Festival | களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்! திருச்சிராப்பள்ளியில் குழந்தைகள் வண்ணம் பூசி மகிழ்ந்தனர்

Velmurugan s  | Published: Mar 14, 2025, 3:01 PM IST

சென்னையில் ஹோலி பண்டிகை நேற்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம். நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளியில் குழந்தைகள் வண்ணம் பூசி மகிழ்ந்தனர் ! வசந்தகாலத்தை வரவேற்று, அன்பை பரிமாறிக்கொள்ளும் ஹோலி பண்டிகை நேற்று நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும்சவுகார்பேட்டை பகுதியில் காலை8 மணி முதல் வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர். பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்

Read More...

Video Top Stories