ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.....சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Share this Video

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் அஞ்செட்டி, நாட்ரபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட இடங்களில் இருந்து நீர் பெருக்கமாக ஒகேனக்கல் நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Related Video