
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகள் பற்றியும் பேசினர்.அதில், தகவல் தொழில்நுப்டம் துறை ரீதியில் உள்ள முக்கிய அறிவிப்பை அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார். அதில், வீடுதோறும் மாதம் ரூ.200-க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை பற்றி அறிவித்தார்.