விழுப்புரத்தில் பெய்த மழையினால் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமாகின !

Share this Video

விழுப்புரம் அருகேயுள்ள கானை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாய நிலத்தில் விளைவிக்கும் நெல்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். அப்படி கொண்டு வரப்பட்ட நெல்களை 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தார் பாய் போட்டும், மூட்டை பிடிக்காமல் களத்தில் குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென இரவு பெய்த மழையினால் தார்பாய் விலகி 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. இதே போன்று தார் பாய் போர்த்தி மூட்டை பிடிக்காமல் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்களும் மழைநீரில் நனைந்து சேதமாகின. நெல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை புரியாததால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Video