
இதுவரை விஜய் அவருடைய கொள்கை என்ன என்று சொல்லியிருக்கிறாரா? ஹெச். ராஜா கேள்வி
போதைப் பொருள் வருமானத்தில் சினிமா தயாரிக்கும் மக்களுக்கு எதிரான அரசு வேறு எங்கும் இருக்க முடியாது. ஸ்டாலின் அரசு தொடரும் ஒவ்வொரு நாளும் தமிழ் சமுதாயத்திற்கு அடுத்த தலைமுறைக்கு அழிவுதான். எத்தனை கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. இந்த அழிவு சக்தியை மக்கள் தூக்கி எறிவார்கள். வரும் தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் போதை அரசாங்கம் தூக்கி எறியப்படும். திடீரென சினிமாவில் இருந்து வந்தவர் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது. பாரதிய ஜனதா கொள்கை எதிரி என்ற விஜய் அவருடைய கொள்கை என்ன என்று சொல்லியிருக்கிறாரா? அவருடைய பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சுக்கள் தான். என்று திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ஹெச். ராஜா பேட்டி