
தென்காசியில் தம்பதியை பதறவிட்ட பச்சைப் பாம்பு ! வைரல் வீடியோ !
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த தம்பதியர் இருசக்கர வாகனத்தில் குற்றாலத்திற்கு வருகை தந்தனர் அவர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தென்காசி நகரில் சென்று கொண்டிருந்தபோது அவர்களது இருசக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிய தம்பதியினர் வாகனத்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது பாம்பு ஒன்று உள்ளே பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனால் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவல்ரிடம் உதவி கேட்டபோது அருகில் தான் தென்காசி தீயணைப்பு நிலையம் உள்ளது அங்கே செல்லுங்கள் அவர்கள் உதவி செய்வார்கள் என கூறியதை அடுத்து அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தை பயந்தபடியே தள்ளிக் கொண்டு வந்தனர். அங்கிருந்த தீனைப்பு துறையினர் உடனடியாக வாகனத்தின் ஒவ்வொரு பகுதியாக சோதனை இட்டபோது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள கேபிள் வயர்களுடன் பின்னிப்பிணைந்தபடி பச்சை நிறத்தில் இருந்ததை பார்த்த தீயணைப்புத் துறையினர் பாம்பின் வால் பகுதியை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போது சுமார் 4 அடி நீளம் இருந்த பச்சை பாம்பு பிடிபட்டது.