
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ! முதல்வர் ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில் சென்னையிலுள்ள மழைக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று பேட்டியில் கூறியுள்ளார் .