“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” காவி உடை அணிவிக்கப்பட்ட வள்ளுவருக்கு ஆளுநர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மாளிகையில் காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jan 16, 2024, 2:24 PM IST | Last Updated Jan 16, 2024, 2:24 PM IST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று குறிப்பிட்டுள்ளார்.