நெல்லையப்பர் திருக்கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம் ! திரளான பக்தர்கள் தரிசனம்!

Share this Video

நெல்லையப்பர் திருக்கோவில் 45 ஆண்டுகளாக நாதஸ்வரம் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் போது இசைக்கப்படாமல் இருந்தது பின்னர் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் மூலம் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் நெல்லைப்பர் கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்டது. கோவில் நாதஸ்வர கலைஞர் சரவணன் மற்றும் இசை கலைஞர்கள் மூலம் இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் ஐந்தாவது சுற்றில் இசைக்கப்பட்டது.தொடர்ந்து தங்க நாதஸ்வரத்தில் தியாகராஜர் கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்தில் வளம் வந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் மெய்சிலிர்க்க கண்டு தரிசனம் செய்தனர்.

Related Video