பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் ஒன்றரை சவரன் பறித்த நபர் ! பரபரப்பு காட்சி !
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயது பெண் காவலர் ஒருவர் நேற்று முன் தினம் பணி முடிந்து இரவு 10:30 மணிக்கு மேல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்து சென்றபோது திடீரென வந்த ஒரு நபர் வாயைப்பொத்தி, பெண் காவலர் அணிந்திருந்த ஒன்றை சவரன் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றுள்ளார்.