
நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு
மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக, எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் கஞ்சா கருப்பு பேசியதாவது : ஜெயலலிதா ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம், கர்ப்பிணி பெண்ணுக்கு 18 ஆயிரம் பணம், பொருட்கள் என வளைகாப்புத் திட்டம் என ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. எடப்பாடியார் ஆட்சி திரும்ப வந்தால் தான், மின்சாரக் கட்டணம் குறையும். ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி வெளியே வந்துள்ளேன். நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார். நாங்கள் பங்காளிகள் சண்டைப் போடுவோம், திரும்ப சேர்ந்து கொள்வோம். இதை அவர் பேசக் கூடாது என மதுரையில் நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு.