Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

Car Accident : கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்ற 4 இளைஞர்கள் பலியான தகவல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Video

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளனர் சில இளைஞர்கள். தீடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பருசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவின் உடல் மட்டும் காரின் வெளியில் சிக்கியதால் உடலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video