ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைக் கூட்டம் கடப்பதைக் கண்டு அச்சமடைந்த செல்பி பிரியர்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
 

Share this Video

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

நேற்று மாலை இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது.அப்போது. அவ்வழியாக சென்ற யானைக்கூட்டத்தை பார்த்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு சில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கத்தில் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.

Related Video