கோடநாட்டில் சசிகலாவின் பங்களாவில் புகுந்து கண்ணாடிகளை உடைத்த யானை

கோடநாடு அருகே உள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட் பங்களாவின் கண்ணாடிகளை  உடைத்தது யானைகள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

First Published Oct 5, 2023, 1:45 PM IST | Last Updated Oct 5, 2023, 1:45 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு செல்லும் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கர்சன் டீ  எஸ்டேட்  என்றழைக்கப்படும் கிரீன் டீ  எஸ்டேட்  உள்ளது. இந்த  எஸ்டேட்டின்  அலுவலக கண்ணாடிகள் கடந்து சில நாட்களுக்கு முன் உடைந்து கிடந்ததாக எஸ்டேட் நிறுவாகம் சார்பில்  சோலூர் மட்டம்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடங்கள் மற்றும் சிசிடிவியை  ஆய்வு செய்தனர். விசாரணையில் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கண்ணாடிகளை  உடைத்தது யானைகளாக இருக்கக் கூடும்  என்று  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து  விசாரணை  நடந்து வருகிறது.

Video Top Stories