Watch : ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 1லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரிமாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி கரையோர பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் தற்போது 1லட்சம் கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியிலுள்ள சினிபால்ஸ் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி முழுவதுமாக மூழ்கி நீர்வீழ்ச்சிக்கான சுவடே தெரியாமல் கடல் போல் காட்சியளிக்கிறது.