
கேட்டில் சிக்கி பரிதவித்த நாய்க்குட்டி ! பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் ...வைரல் வீடியோ !
கோவை, சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பாநகரில் பாரதி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இன்று அதிகாலை அந்த வீட்டின் கேட்டின் அருகே வந்த நாய்க்குட்டி ஒன்று, கேட்டில் இருந்த இரும்பு வளையத்திற்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்டது. மீண்டும் அதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் பரிதவித்தது. அதன் அருகிலேயே அந்த நாய்க்குட்டியின் தாயும் தனது மற்ற குட்டிகளுடன் வந்து செய்வதறியாது திகைத்தது நின்றது. இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, கிளவுஸ் அணிந்து, மெதுவாக அதன் தலையை வெளியே தள்ளி கேட்டில் சிக்கி இருந்த குட்டி நாயை பத்திரமாக மீட்டனர்.