ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்?
அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.