எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!

Ettaiyapuram : சாலையோரம் நின்ற பைக் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published Jun 11, 2024, 10:10 PM IST | Last Updated Jun 11, 2024, 10:10 PM IST

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் குமார் வெங்கடேசன், பொன்மாடசாமி. இருவரும் இரு சக்கர வாகனத்தில், தங்களது ஊரிலிருந்து எட்டையாபுரத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் முத்தலாபுரம் பாலம் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள கடையில் குடிக்க வாட்டர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். 

அப்போது திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் அதிவேகமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியத்தில், பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த குமார் வெங்கடேசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பொன் மாடசாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர்  திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரைச் சேர்ந்த முகமது சுமைலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories