
கட்சியை ஒருங்கிணைக்க ஈபிஎஸ்க்கு கெடு, எங்களது கோரிக்கையை மறுத்தால்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர் வைக்கின்ற வேண்டுகோள் எந்த கண்டிஷனும் இல்லை என்கிறார், பல்வேறு மேடையிலும் கருத்துகளை சொல்கிறார். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். என் நிலையில் தான் எல்லோரும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இந்த இயக்கம்தான் சகோதர பாசத்தை உருவாக்கி இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். அதை உருவாக்க நாம் வெளியில் சென்றவர்களை அழைத்து வந்து செயல்படுத்த வேண்டும்.