
நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் ! கடம்பூர் ராஜூ பேச்சு
நிழலின் அருமை வெயிலில் நின்றால் தான் தெரியும். இன்றைக்கு சுட்டெரிக்கும் சூரியனாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டு காலம் முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு அவ்வளவுதான் முடிந்து விட்டது. இனி மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த விடியா ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டும். நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என இன்றைக்கு தமிழக வாக்காளர்கள் எண்ணுகின்றனர். தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம். இந்த சம்பிரதாயம் முடிந்தவுடன் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கண்டிப்பாக விடிவு காலம் பிறக்கும். சாதாரண தொண்டனையும் உயர்த்தி பார்க்கும் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். என பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசினார் .