
முகமுடி அணிந்து அதிமுகவிற்குள் வந்தவர்தான் டிடிவி தினகரன்தான் ! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேட்டி
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா ஏற்கனவே திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். யார் கட்சி கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2011ல் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை ஜெயலலிதா நீக்கினார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முகமுடி அணிந்து அதிமுகவிற்குள் வந்தவர்தான் டிடிவி தினகரன்தான். அவர் நான் முகமுடி அணிந்து சென்றாக கூறுவது எந்த விதத்தில் நியாயம். முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் இருந்துதான் டிடிவி தினகரன் இப்படி பேசுகிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது என்று தெரியவில்லை. என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் தெரிவித்துள்ளார் .