எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் பூங்கொத்துக்கள் குப்பைக்கு செல்லும் வீடியோ வைரல் !

Share this Video

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், இரண்டு நாள் பயணமாக தஞ்சை மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூரில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார், இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தும் வகையில் பூங்கொத்து, சால்வைகளை அவருக்கு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்கின்றனர், இந்நிலையில் பூங்கொத்துப்பெற்ற சில நொடிகளிலேயே இபிஎஸ்ஸின் பாதுகாவலர்கள் அவற்றை வாங்கி பூங்கொத்துகளை பிய்த்து எறிந்து குப்பையில் வீசுகின்றனர், அதிக செலவில் பூங்கொத்துகளை வாங்கி உடனே குப்பைக்கு செல்வதால் இதனை வாங்கி வந்தவர்கள் அங்கிருந்து முக சுழிபுடனும் வருத்தத்துடனும் சென்றனர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Related Video