செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமி ! உற்சாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் !
Edappadi Palanisamy vs Sengottaiyan : அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேர்தலில் வாக்குகள் பிரிந்து எதிர்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்ட பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறிவிட்டார்.