
மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!
மைசூரில் இருந்து சர்க்கரை லாரியில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்டுள்ள போதை புகையிலைப் பொருட்களை கூடலூர் சோதனை சாவடியில் மடக்கி பிடித்த காவல்துறையினர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் காவல்துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மைசூரில் இருந்து சர்க்கரை ஏற்றுக் கொண்டு வந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது 17 மூட்டைகளில் 950 போதை புகையிலை பண்டல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து, தேவாலா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

மேலும், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த கன்னியாகுமாரியை சேர்ந்த தர்மராஜ் என்ற லாரி ஓட்டுனரை கைது செய்த விசாரணை நடத்தினர்.