Asianet News TamilAsianet News Tamil

Bhogi Pongal 2024: போகி பண்டிகை அன்று மறந்து கூட பகலில் இப்படி செஞ்சிடாதீங்க!

 

do's and don'ts for Bhogi Festival | பொங்கலுக்கு முந்தைய தினம் கொண்டாடப்படும், போகி பண்டிகை அன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

First Published Jan 8, 2024, 11:36 AM IST | Last Updated Jan 8, 2024, 11:36 AM IST

தமிழர்களின் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் திருவிழா. பொங்கலுக்கு முந்தைய தினம், "பழையன கழிதலும்... புதியன புகுதலும்", என்கிற பழமொழிக்கு ஏற்ப வீட்டை மாசு படுத்தும் மற்றும் நமக்கு தரித்திரத்தை உண்டாக்கும் சில பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி விட்டு, புதிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டிய நாளாக இந்த நாள் இருந்து வருகிறது.